தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் - நிபுணர்கள் கணிப்பு!

 

இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,950-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி என அடுத்தடுத்துப் முக்கியப் பண்டிகைகள் வரவிருப்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் முதலீடாக மட்டுமின்றி உணர்வுப்பூர்வமான பொருளாகப் பார்க்கப்படுவதால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயருவதற்கே அதிக வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.