மாலையிலும் உயர்ந்த தங்கம் விலை... சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனை!

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 5) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.1,07,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.13,480-க்கு விற்பனையாகிறது.

இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,280 வரை உயர்ந்த நிலையில், பிற்பகலில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வர்த்தகத் தேவைகளின் அதிகரிப்பு காரணமாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.