மாலையில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை... திடீர் உயர்வால் இல்லத்தரசிகள் கவலை.. மேலும் உயருமா? நிபுணர்கள் கணிப்பு!

 

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாளின் தொடக்கத்தில் ஏற்பட்ட சரிவு, மாலையானதும் திடீரென உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 1,920 வரை குறைந்திருந்த நிலையில், மாலையில் திடீரென சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ. 1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 140 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 14,155-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையைப் போலவே வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.