தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு! ரூ.1,13,240-க்கு சென்றது!
சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை ஆகிறது.நேற்று செப்டம்பர் 17-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,080-க்கும், ஒரு கிராம் ரூ.14,010-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 12-ம் தேதி சவரன் ரூ.1,13,360 ஆக இருந்தது. 14-ம் தேதி ரூ.1,13,000 ஆகவும், 15-ம் தேதி ரூ.1,12,320 ஆகவும் குறைந்தது.செப்டம்பர் 16-ம் தேதி ரூ.1,12,520 ஆக உயர்ந்த நிலையில், 17-ம் தேதி மீண்டும் ரூ.1,12,080 ஆக குறைந்தது. தற்போது இன்று மீண்டும் ரூ.1,13,240 ஆக உயர்ந்துள்ளது.அதாவது, கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 55 ஆயிரமாக உள்ளது.நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.