தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்... ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு 1 பைசா ஒப்பந்தம்! 

 

தவெக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஏழுநூற்று ஐம்பத்தி ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரை வெறும் 1 பைசா கோரி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, முழு திட்டத்திற்குமான செய்கூலி, சேதாரம், ஹால்மார்க் மற்றும் போக்குவரத்து போன்ற அனைத்து கூடுதல் செலவுக்கும் மொத்தமாகவே 1 பைசா மட்டுமே கோரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் எல் ஒன்று நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய மதிப்பு கொண்ட இந்த அரசு திட்டத்தில் ஒரு பைசாவிற்கு ஒப்பந்தம் கோரப்பட்டிருப்பது வணிக வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மாநில அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

குறைந்த செலவில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் முன்வந்திருப்பது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் தகுதியான பயனாளிகள் குறித்த விபரங்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு திட்டங்களில் இது போன்ற விசித்திரமான மற்றும் குறைந்த ஏலத்தொகை கோரப்படும் நடைமுறைகள் குறித்து பல்வேறு விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.