தங்கம் விலை திடீர் சரிவு... சவரனுக்கு ரூ1040  குறைந்து அதிரடி மாற்றம்!

 

சென்னையில் தங்கம் விலை இன்று காலை அதிரடியாகக் குறைந்து நடுத்தர குடும்பத்தினருக்கு நிம்மதியை அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் விற்பனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் உள்ளூர் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. குறிப்பாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 130 ரூபாய் குறைந்து 14100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் 1040 ரூபாய் சரிந்து 112800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 14805 ரூபாயாகவும், ஒரு சவரன் 118440 ரூபாயாகவும் குறைந்துள்ளது. இந்த திடீர் விலை வீழ்ச்சி திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குத் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 260000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலவும் விலை குறைவானது சிறு முதலீட்டாளர்களுக்குத் தங்கத்தில் முதலீடு செய்யச் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.