ஒரே நாளில் 2 முறையாக தடாலடியாக சரிந்த தங்கம் ... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தங்கம் விலை அதிரடி சரிவு: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சிதமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், இன்று மாலை விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஒரு சவரன் தங்கம் 400 ரூபாய் குறைந்த நிலையில், மாலை நிலவரப்படி மேலும் 1,040 ரூபாய் சரிந்து நகை வாங்குவோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இன்றைய நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக ஒரு சவரன் தங்கம் விலை 1,440 ரூபாய் வரை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,11,360 ரூபாய் என்ற நிலைக்கு வந்துள்ளது
இது காலை விலையை விட கணிசமான வீழ்ச்சியாகும். தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தினால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், வரும் நாட்களில் விலை இன்னும் குறையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று காலையில் பெரிய அளவில் சரிவு காணப்பட்டது, ஒரு கிலோ வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருந்தது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்று மாலை நேர நிலவரப்படி வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையிலேயே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது