தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு... சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து புதிய உச்சம்!

 

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.114,640-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.8,560 அதிகரித்து ரூ.123,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு நகை வாங்கும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையும் தங்கத்திற்கு இணையாகச் சரித்திரக் காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.30 உயர்ந்து ரூ.330-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.30,000 அதிகரித்து ரூ.3,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்றைய விலை உயர்வு நுகர்வோரை நிலைகுலைய வைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் இறக்குமதி வரி உயர்வு ஆகியவை இந்த விலை மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. நகைக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த விலையேற்றத்தால் பெரும் கவலையடைந்துள்ளனர். திருமண சீசன் காலம் நெருங்கி வரும் சூழலில், தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது சாமானிய மக்களின் திட்டமிடலைப் பாதித்துள்ளது.