வார தொடக்கத்திலேயே எகிறிய  தங்கம் விலை! 

 

 

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் மற்றும் நகையப்பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சியை உடைக்கும் விதமாக கடந்த வார இறுதியில் இருந்து தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 1,12,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 210 ரூபாய் அதிகரித்து 14,070 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக சரிவை நோக்கிச் சென்ற தங்கம் விலை தற்பொழுது திடீரென பவுனுக்கு 1,000 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களினாலேயே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.