சற்றே சரிந்த தங்கம்... நகைப் பிரியர்கள் ஆறுதல்! 

 

சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை இன்று செவ்வாய்க்கிழமை சற்றே குறைந்து நகையப்பிரியர்களுக்குச் சிறிய நிம்மதியைத் தந்துள்ளது. நேற்று வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருந்த நிலையில், இன்று அதன் விலை சற்று இறங்குமுகத்தைக் கண்டுள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவி வரும் பல்வேறு பொருளாதார மாற்றங்களின் எதிரொலியாகவே  இந்த  மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,060-க்கு கடைகளில் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தை நோக்கிச் சென்ற தங்கம் விலை இன்று திடீரெனச் சற்றே குறைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆபரணத் தங்கத்தைத் தொடர்ந்து இன்று வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்து புதிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், அதேபோல் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும்   விற்பனை செய்யப்படுகிறது. தங்க நகைகள் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும்     கவனித்து வருகின்றனர்.