சற்றே உயர்ந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி! 

 

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது, இன்று ஜூன் 26-ஆம் தேதி காலை நேரத்தில் திடீரென மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் சந்தை மதிப்பு, நேற்று சவரனுக்கு ரூ.1,680 வரை குறைந்து இல்லத்தரசிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி  அதிகம் விரும்பப்படும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கு விறுவிறுப்பாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மிகச் சரியாக ரூ.640 வரை உயர்ந்து,  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,760 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி நுகர்வோர் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சள் உலோகத்தின் விலையைத் தொடர்ந்து,  வெள்ளியின் விலையும் இன்று சற்றே அதிகரித்துக் காணப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் மதிப்பு தற்பொழுது 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நகைக் கடைகளில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த  விலை மாற்ற விபரங்கள், இல்லத்தரசிகள்  மத்தியில்  சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.