மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி! 

 

தமிழக நுகர்வோர் சந்தையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது, இன்று ஜூன் 27-ஆம் தேதி காலை நேரத்தில் மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் சரிவைச் சந்தித்த மஞ்சள் உலோகத்தின் சந்தை மதிப்பு, நேற்று சவரனுக்குச் சற்றே குறைந்து நகைப் பிரியர்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  ஆனால் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் காரணமாக இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமான அளவு உயர்வைக் கண்டுள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி, இல்லத்தரசிகளால் அதிகம் விரும்பப்படும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,370-க்கு விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மிகச் சரியாக ரூ.560 வரை உயர்ந்து, தற்பொழுது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,960 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி நுகர்வோர் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை  உயர்ந்துள்ள போதிலும்,   வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் மதிப்பு  2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.