சட்டென்று குறைந்த தங்கம் விலை...நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்று கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் பொருளாதாரச் சூழல்களின் மாற்றங்களே இந்தத் திடீர் விலை வீழ்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரை சரிவடைந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,06,600 ரூபாய்க்கு நகைக்கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. கிராமுக்கான கணக்கில் பார்க்கும்போது தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 13,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும் வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. இதன்படி சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. முகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் வேளையில் தங்கத்தின் விலை குறைந்திருப்பது நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.