வெள்ளிக்கிழமையில் சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை... நகைப்பிரியர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சவரனுக்கு ரூ400 வரை குறைந்து விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து இருநூறு ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான இந்த விலை மாற்றமானது நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ 400 குறைந்து ஒரு லட்சத்து நான்காயிரத்து எண்ணூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ஐம்பது ரூபாய் வரை சரிவு ஏற்பட்டு ரூ13100 க்கு விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் இந்த திடீர் விலை வீழ்ச்சியால் நகைக்கடைகளில் பொதுமக்களின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ஐந்து ரூபாய் வரை குறைந்து இருநூற்று முப்பத்தைந்து ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலையில் ஐந்தாயிரமும் ரூபாய் வரை சரிந்து இரண்டு லட்சத்து முப்பத்தையாயிரத்து ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களே உள்நாட்டில் இந்த விலை வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.