ஆடி முதல் செவ்வாயில் அதிர்ச்சி... தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் உயர்வு! 

 

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மீண்டும் கணிசமாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார  மாற்றங்கள் மற்றும் நிதிச் சந்தையின் பல்வேறு மாற்றங்கள் காரணமாக உள்நாட்டில் தங்கம் விலை இந்த உயர்வைக் கண்டுள்ளது. இந்தத் திடீர் விலை ஏற்றமானது நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் திருமண நிகழ்வுகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,200க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் இந்த உயர்வு பதிவாகியுள்ளது. அதேபோன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,220 என்ற அளவில் விற்பனையாகிறது.

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் உயர்வு காரணமாக நகைக் கடைகளில் பொதுமக்கள் தங்களின் வாங்கும் முடிவுகளைத் தள்ளிப்போடும் சூழல் உருவாகியுள்ளது.தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,40,000 ஆக உயர்ந்துள்ளது.