தொடர் உச்சத்தில் தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி! 

 

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து நகைப் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் காரணமாகத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் வெடித்துள்ளதால் உலகளவில் பெரும் பொருளாதாரத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகத் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதன் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு 210 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல பவுனுக்கு 1680 ரூபாய் உயர்ந்து ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 1,07,440 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதேபோல 24 காரட் தங்கம் கிராமுக்கு 229 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14,651 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 210 ரூபாய் உயர்ந்து 11,245 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 245 ரூபாயாக மாறியுள்ளது. இதன் மூலம் கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு 5,000 ரூபாய் உயர்ந்து 2,45,000 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.