இல்லத்தரசிகளுக்கு ஷாக்... மீண்டும் உயர்ந்த தங்கம் விலை !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வாடிக்கையாளர்களுக்குச் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்த சூழலில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. உலகச் சந்தை நிலவரங்கள் மற்றும் வர்த்தக மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கு விற்பனையாகிச் சற்று ஆறுதல் அளித்திருந்தது. ஆனால் இன்று விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.13,230-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.600 வரை உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,840 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதே வேளையில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே சீராகத் தொடர்ந்து நீடிக்கிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.235 என்ற அளவிலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு சென்றாலும் வெள்ளியின் விலை ஸ்திரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ள செய்தி நகை வாங்குவோரிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.