தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு. ..சவரன் ரூ.106,880-க்கு விற்பனை!
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக., 5) திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து, ரூ.13,200-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.105,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோருக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.13,360-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.106,880-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒரு சவரன் வெள்ளி ரூ.5,000 உயர்ந்து தற்போது ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் பெரும் கவலை அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலை உயர்வின் காரணமாக நடுத்தர மக்கள் நகை வாங்குவதில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.