ஆடி அமாவாசையில் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி... ராக்கெட் வேகத்தில்  உச்சம் தொட்ட தங்கம் விலை... ! 

 

 

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,150-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.113,200-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.113,600-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 4ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்கப்பட்ட நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.7,600 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாங்கும் திறன் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.