மாதத்தின் முதல் நாளில் அதிர்ச்சி... மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
Updated: Sep 1, 2026, 10:06 IST
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்., 01) சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,370-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,385-க்கு விற்பனையாகிறது.
ஒரு சவரன் நேற்று ரூ.1,14,960-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது நகை வாங்குவோரிடையே சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.