சர்...ரென சரிந்த  தங்கம் விலை... நகைப் பிரியர்கள் உற்சாகம்!

 

 

தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நேற்று ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று விலை சரிந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 170 ரூபாய் குறைந்து 14,190 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் நேற்றுடன் ஒப்பிடும்போது 1,360 ரூபாய் குறைந்து 1,13,520 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் 1,17,800 ரூபாய்க்கு விற்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த உச்ச விலையுடன் ஒப்பிடும்போது கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 4,280 ரூபாய் வரை சரிந்துள்ளது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் சரிவு நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.