சர்...ரென சரிந்த தங்கம்... வாரத்தின் முதல் நாளில் இன்ப அதிர்ச்சி! 

 

 

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று செப்.7 நிலவரப்படி சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.113,520க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.113,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,190க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. இதனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,130க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மத்தியில் இந்த மாற்றம் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.