தங்கம் விலை கிடுகிடு உயர்வு... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி! 

 

 

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,130-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.140 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்பொழுது ஒரு கிராம் ரூ.14,270 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.1,13,040-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.1,14,160-க்கு விற்பனையாகிறது. தொடரும் இந்த விலை ஏற்றம் நகை வாங்குபவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நிலையாக நீடிக்கிறது. அதன்படி வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.