தங்கம் விலை கிடுகிடு உயர்வு... சவரன் ரூ.1,14,040-க்கு விற்பனை!
Updated: Sep 10, 2026, 10:06 IST
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 10) ஒரே நாளில் கிராமுக்கு ரூ.110 அதிகரித்து, சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:
-
கிராம் தங்கம்: நேற்று ஒரு கிராம் ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனையாகிறது.
-
சவரன் தங்கம்: நேற்று ஒரு சவரன் ரூ.1,13,160-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
வெள்ளி விலை: வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, தொடர்ந்து 8-வது நாளாக ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனையாகி வருகிறது.