undefined

  குட் பேட் அக்லியில் 10 மடங்கு மாஸ் காட்சிகள்...  கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!

 

 தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்படும் நடிகர் அஜீத்தின் விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனை அடுத்த திரைப்படம் குட் பேட் அக்லி.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.   'குட் பேட் அக்லி' திரைப்படம்  ஏப்ரல் மாதம் 10 ம் தேதி வெளியாகவுள்ளது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் அஜித்குமாருக்கு படத்தில் மாஸ் சீன்கள் இல்லை என  இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  

இதற்கெல்லாம பதிலளிக்கும் வகையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்  சுப்ரீம் சுந்தர்" விடாமுயற்சி திரைப்படம் அஜித்தின் திரைப்படம் போல் இல்லை, மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் எதையெல்லாம் ரசிகர்கள் மிஸ் செய்தார்களோ. அதை விட 10 மடங்கு அதிகமான மாஸ் காட்சிகள் குட் பேட் அக்லி திரைப்படத்தில் காத்திருக்கின்றன.  நீங்கள் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு செல்லும் போது உங்களுக்கு விக்ஸ் மற்றும் ஹால்ஸ் தேவை, ஏனென்றால் திரைப்படம் முழுக்க அத்தனை வாவ் மொமண்ட்ஸ் இருக்கிறது. நீங்கள் கத்தி கத்தி உங்களுக்கு தொண்டை வலி வந்துவிடும்." என கூறியுள்ளார்.   

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!