குட் நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்கிறது!

 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 60 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி, இந்த புதிய உயர்வின் மூலம் 63 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பணவீக்கத் தரவுகளின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டாலும், இதற்கு மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்த பின்னரே இறுதி அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.