undefined

தமிழக அரசின் இலவச ஸ்மார்ட்போன்.. எப்படி விண்ணப்பிப்பது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? ஆகஸ்ட் 19 கடைசி தேதி!

 

தமிழக அரசு தரும் இலவச ஸ்மார்ட் போன்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக அரசு சார்பில், பெண்களுக்கான கல்வி உதவித்தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென் சென்னை எல்லைக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட செவித்திறன் குறைபாடுள்ள / பார்வையற்றோருக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன்கள் கல்வி மாணவர்களுக்கு. மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுயதொழில் புரிபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்.

தகுதிகள் என்ன?

1. செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் / பார்வையற்றோர் 80% 100% தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

2. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

3. டிப்ளமோ/பாலிடெக்னிக் ஐடிஐ பயிற்சி முடித்த 18 வயது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து அரசு ஊதியம் பெறும் ஊனமுற்றவராக இருக்கக்கூடாது.

5. அதிகபட்ச வயது வரம்பு 70.

எனவே, தென்சென்னையைச் சேர்ந்த மேற்கண்ட தகுதிகள் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைய முகவரியில் 19.08.2024 தேதிக்குள் இ-சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா