இந்தியாவில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பில் ஏஐ மையம் அமைக்கிறது கூகுள்!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய முதலீட்டை மேற்கொள்கிறது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.25 லட்சம் கோடி) மதிப்பில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) மையம் அமைக்கப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இந்த மையம் மூலம் ஏஐ தொழில்நுட்ப ஆராய்ச்சி, தரவு பகுப்பாய்வு, மற்றும் புதுமையான டிஜிட்டல் தீர்வுகள் உருவாக்கப்படும் எனவும், இந்திய இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கூகுள் ஏஐ மையம் திறமையான இளம் பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான பயிற்சி தளமாகவும் செயல்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு இதுவாகும். இதன் மூலம் இந்தியா உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி மையங்களின் முக்கிய இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!