அரசு, தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
திருவாரூரில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோர விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
திருவாரூரில் இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசுப் பேருந்தும், எதிர்திசையில் வந்த தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதலின் வேகத்தில் இரு பேருந்துகளின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தன.
விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்து நடந்த உடனேயே அக்கம்பக்கத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போக்குவரத்து மற்றும் உள்ளூர் காவல்துறையினர் விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
அதிவேகமா அல்லது ஓட்டுநர்களின் கவனக்குறைவா என்பது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.