undefined

கார் மீது பேருந்து மோதி கோர விபத்து.. 5 பேர் பலியான சோகம்!

 

திருப்பூரைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர்-சித்ரா தம்பதி. இவர்கள் 60வது திருமண நாளை கொண்டாடுவதற்காக நேற்று திருக்கடையூரில் இருந்து புறப்பட்டு காரில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்று காலை வெள்ளக்கோவிலை கடந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது ஓலப்பாளையத்தில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து சந்திரசேகர் ஓட்டி வந்த கார் மீது மோதியது.

இதில் காரில் பயணம் செய்த சந்திரசேகர், சித்ரா மற்றும் இளைய மகன் இளவரசன், மூத்த மருமகள் ஹரிவித்ரா, மூன்று மாத பேத்தி சாக்ஷி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த மற்றொரு நபர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு துணை மருத்துவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனையடுத்து வெள்ளக்கோவில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்