கரூர் அருகே சென்டர் மீடியனில் மோதி அரசு பேருந்து விபத்து – ஓட்டுநர், நடத்துநர் காயம்!

 

 

திருச்சி – கரூர் வழித்தடத்தில் வந்த அரசு பேருந்து, கரூர் காந்திகிராமம் அருகே இன்று காலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து, காந்திகிராமம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்துக்கு ஓட்டுநரின் தூக்கக் கலக்கமே காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம், நடத்துநர் குமரேசன் ஆகிய இருவரும் லேசான காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது விசாரணையின் முடிவிலேயே உறுதி செய்யப்படும்