தமிழ் வழியில் படித்தோருக்கான அரசு பணிகளில்  20% இட ஒதுக்கீடு - ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்!

 

தமிழக அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீடு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டின் சட்டப்படி அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் மீண்டும் இந்தச் சலுகையின் கீழ் முன்னுரிமை பெறத் தகுதியற்றவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இக்குழப்பத்தைத் தெளிவுபடுத்தவும், 2010 செப்டம்பர் 7-க்குப் பிறகு தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் பணியில் சேர்ந்தவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.

இனி புதிதாக அரசுப் பணிகளில் சேருபவர்களுக்கு மட்டுமே இந்தத் தமிழ் வழி முன்னுரிமைச் சலுகை பொருந்தும் வகையில் மசோதா திருத்தப்பட்டு, தற்போது ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.