வி.எஸ்.பாபு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு! தமிழக ஆளுநர் அர்லேகர் இரங்கல்

 

 

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு, இன்று (நவ.19) பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். வி.எஸ்.பாபுவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்