செப்.30 வரை குழந்தைகளுக்கு இலவச ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் - மத்திய அரசு அறிவிப்பு!

 

நாடு முழுவதும் 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை எந்தவிதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளும் அவகாசம் வரவிருக்கும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் (2025) மாதம் முதல், குழந்தைகளுக்கான கட்டாய பயோ-மெட்ரிக் புதுப்பிப்புக்கான கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெற்றோர் எவ்விதக் கட்டணமும் செலுத்தாமல் இச்சேவையைப் பெறலாம்.

ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணியை ஆன்லைன் வழியாக மேற்கொள்ள முடியாது. எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேவை மையத்திற்கு நேரில் அழைத்துச் சென்றுதான் கைரேகை, கண் கருவிழி மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

இலவசமாகப் புதுப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி முடிவடைவதால், அதற்குள் அருகில் உள்ள ஆதார் மையங்களை அணுகிப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.