வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழிக்க அரசு முயற்சி - ராகுல் காந்தி!
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ₹92,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தை நேரில் ஆய்வு செய்த ராகுல் காந்தி, இத்திட்டம் இயற்கைக்கும் பழங்குடியின மக்களுக்கும் எதிரான "மாபெரும் குற்றம்" என்று விமர்சித்துள்ளார்.
இன்று கேம்ப்பல் பே பகுதியில் பழங்குடியின மக்கள் மற்றும் மீனவர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி கூறுகையில், "வளர்ச்சி என்ற போர்வையில் சுமார் 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான மழைக்காடுகளை அழிக்க அரசு முடிவு செய்துள்ளது. பல லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளன. இது வளர்ச்சி அல்ல, வளர்ச்சியின் மொழியில் பேசப்படும் பேரழிவு."
நிக்கோபார் பழங்குடியின மக்களின் கருத்துக்களைக் கேட்காமலேயே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இது அவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்விடத்தைப் பறிக்கும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த ₹92,000 கோடி மதிப்பிலான திட்டத்தில்:
எரிசக்தி ஆலை மற்றும் ஒரு புதிய நவீன நகரம் ஆகியவை அடங்கும். இத்திட்டம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ரீதியான முக்கியத்துவத்திற்காகக் கொண்டு வரப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
"இயற்கைச் சொத்துக்களைச் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் மிகப்பெரிய ஊழல் இது. இங்கிருக்கும் 'லெதர் பேக்' கடல் ஆமைகள் மற்றும் அரிய வகை உயிரினங்களின் வாழ்விடத்தை இது அழித்துவிடும். இந்திய மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் நமது நாட்டின் இயற்கை பொக்கிஷங்களை நாம் இழந்து