கிராமசபைக் கூட்டம்... முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் எம்பி கடிதம்!

 

வரவிருக்கும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களை மாநிலத்தின் ஜனநாயக அமைப்பின் வலுவான அடித்தளமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில் கிராமசபைகளின் அதிகாரங்களை மேம்படுத்துவது மற்றும் பொதுமக்கள் பங்கேற்பை அதிகரிப்பது குறித்து முக்கியப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கிராமசபைகளுக்குக் கூடுதல் நிர்வாக மற்றும் நிதிசார் அதிகாரங்களை வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளில் மக்களின் நேரடிப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுபானக் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் அதற்கான அனுமதிகள் குறித்து எடுக்கப்படும் முடிவுகளில் கிராமசபைகளின் கருத்துகளுக்கும், தீர்மானங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

கிராமசபைக் கூட்டங்களை வெறும் சடங்காக மாற்றாமல், கிராமப்புற மேம்பாட்டின் மையப்புள்ளியாக மாற்றுவது தொடர்பாகவும், வெளிப்படைத்தன்மையுடன் கூட்டங்களை நடத்துவது தொடர்பாகவும் மொத்தம் 8 முக்கியப் பரிந்துரைகள் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளைத் தன்னாட்சி அதிகாரமிக்கதாக மாற்றவும், கிராமப்புற மக்களின் குரல் நிர்வாகத்தில் எதிரொலிக்கவும் இந்த நடவடிக்கைகள் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.