கிராண்ட் செஸ் தொடர்: பிரக்ஞானந்தா தோல்வி - கருணா முன்னிலை!
Aug 27, 2026, 20:00 IST
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றுவரும் கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா அமெரிக்க வீரர் பேபியானோ கருணாவிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
தொடரின் இறுதிப் போட்டியின் முதல் கிளாசிக்கல் ஆட்டத்தில், கருப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 48-வது நகர்த்தலின் முடிவில் தோல்வியைத் தழுவினார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க வீரர் பேபியானோ கருணா புள்ளிக் கணக்கில் முன்னிலையைப் பெற்றுள்ளார். இந்த இறுதிப்போட்டியானது கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிளிட்ஸ் என பல்வேறு சுற்றுகளைக் கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.