பெரும் சோகம்... கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலி!
தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் சர்ச் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இதில், ஒப்பந்தத்தக்காரர் நடராஜின் மேற்பார்வையில் 5 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர், இந்நிலையில், நேற்று தகரத்தால் ஆன மேற்கூரை அமைக்கும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர், அப்போது உயரமான நகரும் ஏணியில் ஏறி தகரத்தை பொருத்திய போது, ஏணி மின்கம்பியில் மோதியிருப்பதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், தன்னாங்குடி கிராமத்தில் வசித்து வரும் கோபி என்ற வெள்ளைச்சாமி, தர்மபுரியைச் சேர்ந்த பாக்யராஜ் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், பின்னங்குடி கிராமத்தில் வசித்து வரும் சிவக்குமார் 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில், வெள்ளைச்சாமி மற்றும் பாக்யராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து சிவக்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!