வெற்றிவேல் முருகனுக்கு அரோகரோ... பிரதமர் மோடி தைப்பூச வாழ்த்து!
இன்று பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய்க்கிழமை தைப்பூசத்தை ஒட்டி அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தைப்பூசத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும்.
இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலாக்கத்தையும் கொண்டுவரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!