லாரி - கார் நேருக்கு நேர் மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!
Nov 22, 2026, 20:45 IST
குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவக் குடும்பத்தினர் ராஜஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.
அங்கிருந்து காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, குஜராத்தின் பஜ் - ஹவ்டா தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்தக் கோர மோதலில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 7 பேரும் உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்