எப்புடி... ரா.... குஜராத்தில் ஓயாமல் அலையடிக்கும் கிணறு...  வைரலாகும்  வீடியோ! 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கிணற்றுக்குள் யாரும் இல்லாத நேரத்திலும் தண்ணீர் மட்டும் சுயமாக அலைபாய்ந்து கொந்தளிக்கும் விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த விசித்திரமான செயலால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏதேனும் அமானுஷ்ய சக்தி இருக்குமோ என்ற அச்சத்துடன் கிணற்றைச் சுற்றிக் கூடி நின்று பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகத் தொடரும் இந்த மர்ம நிகழ்வு சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

allowfullscreen

கிணற்றுக்குள் நீர்மட்டம் திடீரென அலைவது போன்ற இந்தச் செயல் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து அப்பகுதி மக்கள் பல்வேறு வகையான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். நிலநடுக்கம் அல்லது பூமிக்கு அடியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்று அஞ்சிய பொதுமக்களின் சந்தேகத்தைப் புவியியல் நிபுணர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். தீவிரமான மழைப்பொழிவு காரணமாக நிலத்தடி நீர் மட்டம் மாறுபடுவதாலும், கிணற்றுக்கு அடியில் காற்று அடைத்துக் கொள்வதாலும் இந்த அலைகள் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது போன்ற விசித்திரமான வதந்திகளையும் நம்பகத்தன்மையற்ற தகவல்களையும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த மர்ம நிகழ்வு என்ன என்பது குறித்த முழுமையான உண்மைகளைக் கண்டறிய அறிவியல் குழுவினர் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்