பிரபல ஜிம் பயிற்சியாளர் விஜய் குமார் படுகொலை - டெல்லியில் பரபரப்பு!
தலைநகர் டெல்லியில் உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஃபதேபூர் பேரி பகுதியைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் விஜய் குமார், இன்று காலை ஜிம்மிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர் அவரைக் குறிவைத்துச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர்.
பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் முன்பகை காரணமாக இந்தத் கொலை அரங்கேறியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. தப்பியோடிய கொலையாளிகளைத் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.