undefined

எச்.ராஜா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்!  

 

பாஜக மூத்த தலைவரும் தேசிய குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா  மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை தெரிவித்தனர். அனைவரின் பிரார்த்தனையும், மருத்துவர்களின் சிகிச்சையும், இறைவனின் அருளாலும் அவர் பூரண குணமடைந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி சென்னை கிண்டியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். முதலில் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் அப்பல்லோ கிரீம்ஸ் ரோடு  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மூளை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவர்கள் நான்கு வாரங்கள் முழு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவமனையில் இருந்தபோது ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். தற்போது அவர் வீட்டில் ஓய்வில் உள்ளார்.