விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய அமெரிக்கா... வெளிநாட்டு ஊழியர்கள் அதிர்ச்சி!

 

அமெரிக்காவில் 50 சதவீதத்திற்கும் மேல் வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அவர்களது விசாக்களை நீட்டிக்கப் புதிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி எச்-1பி விசா நீட்டிப்பிற்கு 380000 மற்றும் எல்-1 விசா நீட்டிப்பிற்கு நான்கு லட்சத்து இருபத்தெட்டாயிரம் ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சென்று அங்குப் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் இந்த அதிரடியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விசா கட்டண உயர்வைச் சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனங்களே நேரடியாக ஏற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு ஊழியர்களைத் தொடர்ந்து தங்கள் நிறுவனங்களில் தக்கவைத்துக்கொள்வதில் முதலாளிகளுக்குப் பெரும் சிக்கலும் தயக்கமும் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பணியாளர்களை நம்பிப் பல முக்கியப் பணிகளைச் செய்து வரும் நிறுவனங்கள் இதனால் கடுமையான நிதிச் சுமையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் உள்ள ஐடி மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளன. கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நிறுவனங்கள் பல முற்படக்கூடும் என்று தகவலlகள் வெளியாகி வருகின்றன. உலக நாடுகளைச் சேர்ந்த திறமையான பல பணியாளர்களின் அமெரிக்கக் கனவை இந்த விசா கட்டண உயர்வு கடுமையான கேள்விக்குறியாக்கியுள்ளது.