புனித ஹஜ் பயணம்.. விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!
Jul 22, 2026, 12:11 IST
வரும் 2027-ஆம் ஆண்டிற்கான (ஹிஜ்ரி 1448) புனித ஹஜ் பயணத்திற்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் விண்ணப்பிப்போருக்கான அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்லைன் வழியில் பயணிகள் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, ஜூலை 30 அன்று இந்திய ஹஜ் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கணினி வழி குலுக்கல் நேரலையாக நடைபெற உள்ளது.
குலுக்கல் முறையில் தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் புனிதப் பயணிகள் தங்களது பயணத்தை உறுதி செய்ய முதற்கட்டக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தேர்வாகும் பயணிகள் தங்களின் முதல் தவணைக் கட்டணமாக ரூ. 1,52,300-ஐச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை ஆகஸ்ட் 10-க்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.