உலகின் உயரமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த 'ஹேப்பி தீபாவளி' வாழ்த்து! 

 

உலகின் மிக உயரமான கட்டடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில், தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஒளிரவிடப்பட்ட 'ஹேப்பி தீபாவளி' வாழ்த்துச் செய்தி உலகளவில் மாபெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா கட்டடம், உலகளவில் புகழ்பெற்ற முக்கியப் பண்டிகைகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளின் போது சிறப்பு அலங்கார விளக்குகளால் ஒளிரவிடப்படுவது வழக்கம்.

allowfullscreen

அந்த வகையில், நடப்பு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புர்ஜ் கலிஃபா கட்டடம் முழுவதும் பிரம்மாண்டமான எல்.இ.டி திரைக் காட்சிகள் மற்றும் வண்ணமயமான விளக்கு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கட்டடத்தின் மையப் பகுதியில் 'ஹேப்பி தீபாவளி' என்ற வாழ்த்துச் செய்தி மின்னொளியில் ஒளிரவிடப்பட்டு, காண்போரைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.

இந்த எழில்மிகு காட்சியை நேரில் காண்பதற்காகத் துபாயில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் புர்ஜ் கலிஃபா வளாகத்தைச் சுற்றித் திரண்டிருந்தனர்.

புர்ஜ் கலிஃபாவில் தீபாவளி வாழ்த்து ஒளிரவிடப்பட்டதும், அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கரவொலி எழுப்பியும், தங்களது கைபேசிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்த பிரம்மாண்ட ஒளிக்காட்சி பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.