undefined

இன்ஸ்டா பயனர்களுக்கு கொண்டாட்டம்... நீண்டநாள் எதிர்பார்த்த புதிய வசதி அறிமுகம்!

 

சமூக வலைத்தள பயனர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் 2 பில்லியன் பேருக்கும், இந்தியாவில் மட்டும் 40 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களையும் கொண்ட இன்ஸ்டாகிராம், சமீபகாலமாக தனது பயன்பாட்டை மேம்படுத்த பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டபின், இன்ஸ்டாவின் ‘ரீல்ஸ்’ பகுதி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ‘Watch History’ என்ற புதிய வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தாங்கள் முன்பு பார்த்த ரீல்ஸ்களை எளிதில் மீண்டும் பார்க்க முடியும். இதற்கு முன் அந்த வசதி இல்லாததால், பலரும் பார்த்த வீடியோக்களை மீண்டும் கண்டுபிடிக்க சிரமப்பட்டனர்.

புதிய வசதி இன்ஸ்டாகிராம் செயலியின் Settings பகுதியில் உள்ள Your Activity விருப்பத்தின் கீழ் கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் காணொளி வரலாற்றைப் பார்வையிட்டு, விருப்பமான ரீல்ஸ்களை மீண்டும் பார்க்கவும் பகிரவும் வசதியாக இருக்கும். பயனர்களிடையே இந்த புதிய வசதி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?