ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; நியூசிலாந்து தொடரிலும் பங்கேற்பது சந்தேகம்!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வரவிருக்கும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.

வரும் அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இந்தத் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக அவர் முழுமையாகக் குணமடைந்து மீண்டு வரக் கூடுதல் காலம் தேவைப்படும் என்பதால், அவருக்கு மருத்துவக் குழுவினர் முழு ஓய்வு பரிந்துரைத்துள்ளனர்.

ஆஸ்திரேலியத் தொடரைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் பங்கேற்பது தற்போது சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.