கணவரை கொடுரக் கொலை செய்து உடலைத் துண்டாக்கிய மனைவி... தற்கொலை முயற்சி
Aug 24, 2026, 09:59 IST
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவர் ராஜேஷைக் கொடூரமாகக் கொன்று உடலைத் துண்டாக்கிய மனைவி விம்லா தேவி, வீட்டு உரிமையாளர் பார்த்ததால் மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். காயமடைந்த அவரை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
உடலின் சில முக்கிய உறுப்புகள் காணாமல் போயுள்ள நிலையில், மூடநம்பிக்கை சடங்குகள் மற்றும் குடும்பத் தகராறு காரணமாக இக்கொலை நடந்ததா என போலீசார் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.