முன்னாள் மந்திரியின் மகன்  பண்ணை வீட்டில் சடலமாக மீட்பு... தற்கொலையா? ... தீவிர விசாரணை! 

 

 

அரியானா மாநில முன்னாள் மந்திரி ஜஸ்விந்தர் சிங் சந்துவின் மகன் ககன்ஜித் சந்து (48) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜஸ்விந்தர் சந்து, பிஹொவா தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்ததுடன், அரியானா வேளாண்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர். அவர் கடந்த 2019-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

VIDEO | Rupnagar, Punjab: Former Haryana Minister Jaswinder Singh Sandhu's son Gaganjot Sandhu allegedly dies by suicide.

(Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/bnJYRyKErE

— Press Trust of India (@PTI_News) September 11, 2026

ககன்ஜித் சந்து, அரியானாவின் கைதல் மாவட்டம் கோகட் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், அங்குள்ள அவரது பண்ணை வீட்டில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.ககன்ஜித் சந்து உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.